திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மனைவியுடன் சிறுவன் கள்ளத்தொடர்பு.? கழுத்தை நெரித்து கொடூர கொலை.!! பரபரப்பு வாக்குமூலம்.!!
ஹரியானா மாநிலத்தின் குருகிராம் நகரில் 15 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 நபர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது மனைவியுடன், சிறுவன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக சந்தேகம் ஏற்பட்டதால் சிறுவனை கொலை செய்ததாக குற்றவாளி வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்
கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி குருகிராம் நகரின் கலீல்பூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனை காணவில்லை என அவனது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் அந்த கிராமத்தின் கிலாவாஸ் அணை பகுதியில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிக்கிய குற்றவாளிகள்
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த அமித் குமார் மற்றும் தருண் ஆகியோர் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்து விசாரித்ததில் இருவரும் சேர்ந்து சிறுவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பெண்ணின் கைவிரலை நள்ளிரவில் கடித்த இளைஞர் அடித்துக் கொலை.. துள்ளத்துடிக்க அரங்கேறிய பயங்கரம்.!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் கொலை
இந்நிலையில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான அமித் குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில் சிறுவனுக்கும் தனது மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக சந்தேகப்பட்டதால் சிறுவனை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தனது நண்பன் தருண் உதவியுடன் அணைக்கட்டு பகுதிக்கு சிறுவனை அழைத்துச் சென்று போதை மருந்து கொடுத்து கயிறால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இதையும் படிங்க: முகத்தில் ஆசிட் காயங்களுடன் அரை நிர்வாண உடல்.!! மீண்டும் கூட்டு வன்புணர்வா.? முடுக்கி விடப்பட்ட விசாரணை.!!