ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
#JustIN: இந்தியாவே உஷார்.. 8 மாத குழந்தைக்கு உறுதி செய்யப்பட்டது HMPV வைரஸ்..!
பெங்களூரில் 8 மாத கைக்குழந்தைக்கு எச்.எம்.பி.வி வைரஸ் உறுதியாகியுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகளவில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியது. ஊரடங்கு போன்ற பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொண்ட மக்கள், இன்றளவும் அதன் தாக்கத்தில் இருந்து மீள இயலாமல் போராடி வருகின்றனர்.
தடுப்பு நடவடிக்கை தீவிரம்
இதனிடையே, சமீபத்தில் சீனாவில் எச்எம்பிவி எனப்படும் வைரஸ் ஒன்று பரவுவதாக தகவல் வெளியான நிலையில், அதன் தடுப்பு நடவடிக்கை அங்கு தீவிரப்படுத்தப்பட்டது. மேலும், பிற உலக நாடுகளும் முக்கிய விமான நிலையங்களில் சோதனையை தீவிரப்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: திருமணமான 2 ஆண்டுக்குள் மனைவி டார்ச்சர்.. தலைமை காவலர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை.!
இந்தியாவில் உறுதி
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு, பாப்சிஸ்ட் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட 8 மாத கைக்குழந்தைக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அக்குழந்தைக்கு சீனாவில் இருந்து உலகளவில் பரவத் தொடங்கியுள்ள எச்எம்பிவி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
HMPV வைரஸ்
இருமல், காய்ச்சல், நாசி நெரிசல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறி இருந்தால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெறுவது நல்லது. HMPV வைரசுக்கு தடுப்பூசி இல்லை என்பதால், முதலியேயே சிகிச்சை பெற்றுவிட்டால் என்பதை பிரச்சனையும் இல்லை.
இதையும் படிங்க: உயிரை காப்பாற்ற பயணம்.. வழியில் வந்த எமன்.. இப்படி எல்லாமா மரணம் வரணும்.?!