பிக்பாஸ் சௌந்தர்யாவின் நடிப்பில் அட்டகாசமான டிஸ்டன்ட் திரைப்படம்; ட்ரைலர் வைரல்.!
திருமணமான 2 ஆண்டுக்குள் மனைவி டார்ச்சர்.. தலைமை காவலர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை.!
தற்கொலை கடிதம் எழுதி வைத்த காவலர், திருமணம் முடிந்த 2 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், பையப்பனஹள்ளி பகுதியில் இரயில் சென்றது. அப்போது, தலைமை காவலர் திப்பண்ணா (வயது 33) என்பவர், ஓடும் இரயில் முன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணையில், அவர் ஹீலிமாவு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் என்பது உறுதியானது.
இதையும் படிங்க: பாஜக மகளிரணி நிர்வாகி வீட்டில் மர்ம மரணம்; தூக்கில் தொங்கியவாறு சடலம் மீட்பு.!
தற்கொலை கடிதம்
தனது பணிநேரம் முடிந்ததும் திப்பண்ணா வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்த நிலையில், கணவன் - மனைவி சண்டையில் தற்கொலை நடந்தது அம்பலமானது. கன்னட மொழியில் திப்பண்ணா எழுதிய தற்கொலை கடிதமும் கைப்பற்றப்பட்டது.
அந்த கடிதத்தில் தனது மனைவி, மாமியார் சித்ரவதை காரணமாக தற்கொலை செய்வதாகவும், 2021ல் திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது வரை குழந்தை இல்லாத காரணத்தால் கணவன் - மனைவி சண்டை காரணமாக தற்கொலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் விசாரணை நடக்கிறது.
இதையும் படிங்க: தேனிலவு முடித்த தம்பதிக்கு வழியில் காத்திருந்த எமன்; உறக்கத்தால் துள்ளத்துடிக்க பறிபோன 4 உயிர்.!