#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கொடுமையே! கள்ளக்காதலனை கரம்பிடிக்க கைக்குழந்தையை கொலை செய்த கொடூரத் தாய்.. நெஞ்சை உலுக்கிய சம்பவம்.!
கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம் பணகள்ளி பகுதியில் வசித்து வருபவர் பாக்கியம்மா என்ற இளம் பெண். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்துள்ளார். மேலும் பாக்கியமாவிற்கு கைக்குழந்தை ஒன்று உள்ளது.
இந்த சூழலில் கணவனை பிரிந்த பாக்கியமா தனது தாயார் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பாக்கியம்மாவிற்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறிவுள்ளது. இதனையடுத்து அந்த இளைஞர் கைக்குழந்தையை கைவிட்டு வந்தால் மட்டுமே பாக்கியமாவை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.
இதனால் குழந்தையை கொலை செய்ய பாக்கியமா முடிவு செய்துள்ளார். அதன்படி தனது குழந்தையை தூக்கிக் கொண்டு சென்று கன்வா ஆற்றில் வீசுவிட்டு உறவினர்களை நம்ப வைப்பதற்காக குழந்தை தவறி ஆற்றில் விழுந்து விட்டதாக கூறி நாடகமாடிவுள்ளார்.
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆற்றில் குதித்து குழந்தையை மீட்க முயற்சி செய்தும் பலன் இல்லாமல் போனது. இந்நிலையில் மறுநாள் காலை குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீஸ்சாருக்கு தகவல் தெரிவிக்கவே அங்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் தாய் பாக்கியமாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது போலீசார் நடத்திய கிடக்குப்பிடி விசாரணையில் தனது குழந்தையை ஆற்றில் தூக்கி வீசி கொலை செய்ததை பாக்கியமா ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பாக்கியமாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் பெற்ற குழந்தையை கள்ளக்காதலனை கரம் பிடிப்பதற்காக தாயே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.