மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போதையில் பெட்ரோல் பங்கில் அடாவடி; லைட்டரை பற்றவைத்து பதறவைத்த குடிமகன்கள்.. அதிர்ச்சி சம்பவம்.!
குடிபோதை ஆசாமிகள் செய்யும் செயல்களுக்கு அளவில்லாமல் போகிறது என்பதை உணர்த்தும் விதமாக ஹைதராபாத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள்
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், நாச்சாரம் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை மதுபோதையில் அங்கு புலம்பெயர் தொழிலாளர்களான, பீகார் மாநிலத்தை சேர்ந்த சிரான், அருண் வந்திருந்தனர்.
இருவரும் தங்களின் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு இருந்துள்ளனர். அச்சமயம் அருண் தனது கைகளில் லைட்டர் ஒன்றை வைத்து பற்றவைக்க முயற்சித்துள்ளார். இதனைகவனித்த பெட்ரோல் நிலைய பணியாளர், இருவரையும் கண்டித்துள்ளார்.
இதையும் படிங்க: பட்டாசு விற்பனை கடையில் திடீர் தீவிபத்து; சிதறியோடிய மக்கள்.. பதறவைக்கும் காட்சிகள்.!
போதை கும்பல் அடாவடி
போதையில் இருந்த கும்பலோ, கையில்தானே வைத்துள்ளேன் பற்றவைக்கவா முயற்சித்தேன். பற்றவைத்தாலும் உனக்கென்ன? என வினவியுள்ளது. ஆத்திரமடைந்த பணியாளர் பற்றவைத்துதான் பாரேன் என கூறியுள்ளார். இதனால் போதை கும்பல் நெருப்பை பற்றவைத்து.
பற்றிய நெருப்பு
இவர்கள் நெருப்பை பற்றவைத்தபோது, இவர்களுக்கு அருகே பெட்ரோல் நிரப்பிவிட்டு வாகனத்தை நிறுத்தி இருந்த தாய்-மகள் பதறிப்போயினர். அவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். மேலும், குடிகார இளைஞன், கால்களால் கீழே இருந்த நெருப்பையும் புட்பால் போல எட்டி உதைத்தார்.
தப்பிய தாய்-மகள்
இதனால் தாய்-மகள் காயமடையவிருந்த நிலையில், அதிஷ்டவசமாக தப்பினர். பின் வேறொரு பணியாளர் சுதாரித்து தீயணைப்பான் கொண்டு தீயை அணைத்தார். மேற்படி சம்பவம் குறித்து நாச்சாரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் வடமாநில தொழிலாளர்கள் இருவரை கைது செய்தனர். இவர்கள் போதையில் விபரீதம் செய்ததையும் ஒப்புக்கொண்டனர்.
வீடியோ இதோ
Drunk Man Ignites Fire at Hyderabad Petrol Pump
— Sudhakar Udumula (@sudhakarudumula) October 27, 2024
In a reckless act at a petrol pump in Nacharam, a man from Bihar ignited a lighter while fuel was being dispensed, endangering himself and bystanders, including a woman and her child. The Nacharam police have arrested two men,… pic.twitter.com/9TiR1A4qsc
இதையும் படிங்க: நாயை துரத்திவந்து சோகம்; ஜன்னல் துவாரத்தில் பாய்ந்து இளைஞர் பரிதாப பலி.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!