பாய் பெஸ்டி பேச்சைக் கேட்டு மனைவி விபரீதம்: கண்களில் மிளகுபொடித்தூவி, கல்லால் அடித்தே கணவன் கொலை..!



in-andhra-pradesh-chittoor-a-husband-killed-by-wife-due

கணவர் உயிருடன் இருக்க, வேறொருவருடன் பழக்கத்தை ஏற்படுத்தி நெருங்கிய மனைவி, ஆண் நண்பரின் பேச்சைக்கேட்டு கணவரை கொலை செய்த துயரம் குப்பம் பகுதியில் நடந்துள்ளது.

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம், குப்பம் தொகுதி, சாந்திபுரம் மந்திடலாம், சொல்லிசெட்டி பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தன். இவரின் மனைவி மீனா. தம்பதிகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. 

கள்ளக்காதல்

இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், மீனாவுக்கு, அதே ஊரில் வசித்து வரும் அரவிந்த் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இதனையடுத்து, அரவிந்த் - மீனா இருவரும் தனிமையில் பலமுறை நெருங்கி பழகி இருக்கின்றனர். 

Murder

இதையும் படிங்க: திருமணம் முடிந்த 13 நாட்களில் புதுமணப்பெண் கொலை; நெஞ்சை நடுங்கவைக்கும் காரணம்.. இப்படியும் இழிபிறவிகள்?

கணவர் கொலை திட்டம்

இதனிடையே, இந்த விவகாரம் கோவிந்தனுக்கு தெரியவந்து, அவர் கள்ளக்காதல் ஜோடியை கண்டித்து இருக்கிறார். அவரின் அறிவுரையை கேட்காத கள்ளக்காதல் ஜோடி, அதன் உறவில் தீவிரம் காட்டி இருக்கிறது. மேலும், இதற்கு இடையூறாக இருக்கும் கோவிந்தனை தீர்த்துக்கட்டவும் முடிவு செய்துள்ளது. 

காவல்துறையினர் விசாரணை

சம்பவத்தன்று, அங்குள்ள காட்டுப்பகுதிக்கு கணவரை அழைத்துச் சென்ற மனைவி, மிளகுப்பொடியை கண்களில் தூவி, கல்லால் தாக்கி கொடூரமாக கோவிந்தனை கொலை செய்துள்ளார். இந்த விவகாரத்திற்கு அரவிந்தும் உடந்தையாக இருந்துள்ளார். கொலை சம்பவம் அரங்கேறியதைத்தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி கள்ளக்காதல் ஜோடியை கைது செய்தனர்.

இதையும் படிங்க: "வா ஜாலியா இருக்கலாம்..." கானகிரீட் ஸ்லாபல் அடித்து இளம்பெண் கொலை.!! 19 வயது இளைஞர் கொடூர செயல்.!!