Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
"வா ஜாலியா இருக்கலாம்..." கானகிரீட் ஸ்லாபல் அடித்து இளம்பெண் கொலை.!! 19 வயது இளைஞர் கொடூர செயல்.!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 24 வயது இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட அந்த பெண்ணின் காதலன் அளித்திருக்கும் வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கொலை செய்யப்பட்ட இளம் பெண்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள செராய்கேளா கார்ஸ்வான் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதனையடுத்து சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை தேடி வந்தனர்.
காதலன் கைது
இந்நிலையில் இளம் பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அந்தப் பெண்ணின் 19 வயது காதலனை கைது செய்து விசாரித்ததில் இளம் பெண்ணை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையிலடைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இளம் பெண்ணின் காதலன் அளித்திருக்கும் வாக்குமூலம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: "அய்யோ கண்ணெல்லாம் எரியுதே.." ஓடும் பேருந்தில் பயங்கரம்.!!பெண்கள் மீது கெமிக்கல் வீச்சு.!!
உடலுறவுக்கு மறுத்ததால் கொலை
இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையிடம் வாக்குமூலமளித்த இளைஞன், தனது காதலி உடலுறவுக்கு மறுத்ததால் அவரை கொலை செய்ததாக தெரிவித்திருக்கிறார். சம்பவம் நடந்த தினத்தன்று தனது காதலியை ஆற்றங்கரையில் சந்தித்த அவர் உடலுறவு கொள்ளலாம் என அழைத்திருக்கிறார். அதற்கு இளம்பெண் மறுத்ததால் கான்கிரீட் ஸ்லாபை கொண்டு தலையிலடித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தலைநகரில் பயங்கரம்... ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை.!! காவல்துறை விசாரணை.!!