தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாட்டு; 3 சிறார்கள் இரயிலில் அடிபட்டு பலி.!



  in Bihar 3 minor Boys dies playing pubg in Railway Track 

பப்ஜி விளையாட்டில் மும்முரமாக இருந்த சிறுவர்கள், இரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

பீகார் மாநிலத்தில் உள்ள மேற்கு சாம்பாரன் மாவட்டம், முபாஸில் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 3 சிறார்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் சம்பவத்தன்று நர்கதியாகஞ்ச் - முஸாபர்பூர் இரயில் தண்டவாளத்தில், மான்சா தோலா பகுதியில் அமர்ந்து பப்ஜி விளையாடிக்கொண்டு இருந்தனர். 

மூவரும் ஹெட்செட் போட்டு தண்டவாளத்தில் அமர்ந்தபடி விளையாட்டில் மும்மரமாக இருந்துள்ளனர். அச்சமயம், அவ்வழியே இரயில் வந்த நிலையில், இரயில் ஓட்டுநர் பலமுறை அபாய ஒலியை எழுப்பியும் பலனில்லை, இரயிலை விரைந்து நிறுத்த முற்பட்டும் பலனில்லை. 

இதையும் படிங்க: Watch: விடுமுறையில் சொந்த ஊருக்கு புறப்பட்டு, சடலமான காவலர்; இரயிலில் ஏறும்போது செல்போனில் பேசி விபரீதம்.!

death

இரயில் மோதி சோகம் - காவல்துறை விசாரணை

சிறார்கள் மீது இரயில் மோதிய நிலையில், மூவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விரைந்து வந்து சிறார்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தது ரயில்வே குடியிருப்பை சேர்ந்த புர்கான் ஆலம், சமீர் ஆலம், ஹபிபுல்லா அன்சாரி ஆகியோர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிக்ஸர் அடித்த வேகத்தில் மயங்கி சரிந்த வீரர்; கிரிக்கெட் விளையாட்டின்போது நடந்த சோகம்.!