#Breaking: எஸ்வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை - சென்னை உயர்நீதிமன்றம் உறுதி.!
சிக்ஸர் அடித்த வேகத்தில் மயங்கி சரிந்த வீரர்; கிரிக்கெட் விளையாட்டின்போது நடந்த சோகம்.!
கிரிக்கெட் விளையாட்டின்போது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்னா பகுதியில் வசித்து வருபவர் விஜய் படேல் (வயது 32). இவர் சம்பவத்தன்று நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தார். அவர் சிக்ஸர் விளாசிய நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் மயங்கி விழுந்தார்.
மாரடைப்பு காரணமாக பலி
பதறிப்போன நண்பர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு படேலின் மரணம் உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சாகுற வயசா இது? 8 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்.. பெற்றோர் கண்ணீர்.!
காவல்துறையினர் விசாரணை
இந்த சம்பவம் அவரின் நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தகவல் அறிந்த காவல்துறையினர் விஜய் படேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. மாரடைப்பால் நண்பர்கள் கண்முன் பரிதாப மரணம்..!