#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாம்பை பற்களால் கடித்து மென்ற சிறுவன்; விளையாட்டு பொருள் என நினைத்து பகீர் காரியம்.!
பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டம், பதேபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமுகர் கிராமத்தில் வசித்து வருபவர் ராகேஷ் குமார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, ஒரு வயதாகும் ரியான்ஷூ என்ற கைக்குழந்தை இருக்கின்றனர்.
சம்பவத்தன்று குழந்தை மொட்டைமாடியில் விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், சிறிய அளவிலான பாம்பு ஒன்று அங்கு வந்துள்ளது. சிறுவன் பாம்பை பொம்மை என நினைத்த நிலையில், அதனுடன் சிறிது விளையாடி, பின் அதனை கடித்து மென்றதாக தெரியவருகிறது.
நல்வாய்ப்பாக எந்த தீங்கும் இல்லை
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய், மகனை உடனடியாக குடும்பத்தினர் உதவியுடன் பதேபூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அங்கு குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. குழந்தை நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மாமியாரை கரம்பிடித்த மருமகள்; இது வேற லெவல் திருமணம்..! 3 ஆண்டு காதலால் கணவருக்கு டாட்டா.!
நல்வாய்ப்பாக குழந்தை விளையாட்டுத்தனமாக விஷத்தன்மை இல்லாத பாம்பை எடுத்து கடித்து இருக்கிறான். இதனால் சிறுவனின் உயிருக்கு எந்த விதமான தீங்கும் ஏற்படவில்லை. மருத்துவர்கள் தேவையான சிகிச்சை வழங்கி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: மாமியாரை கரம்பிடித்த மருமகள்; இது வேற லெவல் திருமணம்..! 3 ஆண்டு காதலால் கணவருக்கு டாட்டா.!