இன்ஸ்டாகிராம் நேரலையில் பெண் தற்கொலை; பதறியடித்து வீட்டுக்கு செல்வதற்குள் பிரிந்த உயிர்.!



  in Chhattisgarh a Girl Suicide Instagram Live 

லைவ் ஸ்ட்ரீமிங் செய்த பெண், பார்வையாளர்கள் கண்முன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜாஜகிரி பகுதியில் 19 வயதுடைய அங்கூர் என்ற பெண் வைத்து வருகிறார். இவர் கடந்த டிச.29 அன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து இருக்கிறார். 

நேரலையை சுமார் 20 க்கும் மேற்பட்ட நபர்கள் பார்த்துக்கொண்டு இருந்த நிலையில், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்து இருக்கிறார். 

இதையும் படிங்க: மனைவியின் தொல்லையால் தொழிலதிபர் தற்கொலை; டெல்லியில் அடுத்த சோகம்.!

இதனைக்கண்டு அதிர்ந்துபோன பலரும், அவருக்கு தொடர்பு கொண்டு தற்கொலையை தடுக்க முற்பட்டனர். ஒருசிலர் அவரின் வீட்டிற்கு நேரில் சென்றனர். 

suicide

அங்கு சென்று பார்த்தபோது, அங்கூர் சடலமாக மீட்கப்பட்டார். பின் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

விசாரணையில், அங்கூரின் பெற்றோர் ஐதரபாத்தில் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. அங்கூர் மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

அங்கூர் எந்த நேரமும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் அவரின் ஸ்மார்ட்போனையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பள்ளி முதல்வரை, எட்டி பார்த்த மாணவர்கள்.. கண்ட அதிர்ச்சி காட்சி.. அடுத்தடுத்த விபரீதம்.!