வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
மனைவியின் தொல்லையால் தொழிலதிபர் தற்கொலை; டெல்லியில் அடுத்த சோகம்.!
விவாகரத்து கேட்ட மனைவி வூடிபாக்ஸ் கபே (Woodbox Cafe) நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தும், கூடுதல் சலுகை கேட்டு பிரச்சனை செய்ததால் கணவர் தற்கொலை செய்த சோகம் நடந்துள்ளது.
புதுடெல்லியில் உள்ள கல்யாண் விஹார் பகுதியில் வசித்து வருபவர் புனீத் குரானா (வயது 40). இவரின் மனைவி மணிகா ஜெகதீஷ் பஹ்வா. புனீத் டெல்லியில் செயல்பட்டு வரும் பிரபலமான உணவகத்தின் உரிமையாளர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆவார்.
இதையும் படிங்க: பள்ளி முதல்வரை, எட்டி பார்த்த மாணவர்கள்.. கண்ட அதிர்ச்சி காட்சி.. அடுத்தடுத்த விபரீதம்.!
சொத்து பிரித்து கொடுப்பதில் பிரச்சனை:
இதனிடையே, மகிழ்ச்சியாக வாழ்ந்து தம்பதிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிய முற்பட்டு விவாகரத்து வேண்டி விண்ணப்பித்ததாக தெரியவருகிறது. அப்போது, இருவருக்கும் நிறுவனத்தை நடத்துவது, மனைவிக்கு சேர வேண்டியதை பிரித்து கொடுப்பதில் பிரச்சனை எழுந்துள்ளது.
ஆடியோ வெளியீடு:
மேலும், மணிகா கூடுதலாக சில விஷயங்கள் கேட்டு கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்துபோன புனீத், தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலைக்கு முன்னதாக, பிரபலமான ஊடகங்களுக்கு தனது மனைவியுடன் தான் உரையாடும் ஆடியோவை அனுப்பி இருக்கிறார்.
கூடுதல் சலுகைகளை கேட்டு தொந்தரவு;
அந்த பதிவில், விவாகரத்து கேட்டு விண்ணப்பிக்கும் மனைவி, வணிக ரீதியாக நிறுவனத்தை இணைத்து நடத்தவும், மேலும் சில சலுகைகள் கேட்டும் கோரிக்கை வைத்துள்ளார். சமீபத்தில் பெங்களூரை சேர்ந்த தொழில்நுட்ப பணியாளர் விவாகரத்துக்கு பின் மனைவி வைத்த அளவுக்கதிகமான கோரிக்கை காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். தற்போது டெல்லியிலும் அதேபோன்ற துயரம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: ஐயப்பன் கோவிலில் பெரும் அசம்பாவிதம்; பக்தர் தற்கொலை.!