மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருடன் கையில் துப்பாக்கி; துணிச்சல் வழிப்பறி.. டெல்லி நிலையை பார்த்தீங்களா?.!
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் காவல்துறையினர் பாதுகாப்பு கடுமையாக இருக்கும் எனினும், வெளிப்புற டெல்லியில் உள்ள பல்வேறு பகுதிகளில் மக்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியை ஏற்படுத்தும் வண்ணம் அமைகிறது.
அதேபோல, களையெடுக்க வளரும் களை போல திருட்டு, கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அங்கு அதிகரித்து இருக்கிறது. டெல்லி மாநிலத்தில் எண்ணற்ற சிறப்பு காவல்படை பணியில் இருந்தாலும், திருட்டுச்செயல்களின் எண்ணிக்கை குறையாமல் இருக்கிறது.
துப்பாக்கி முனையில் கொள்ளை
இதனிடையே, டெல்லி மாநிலத்தில் உள்ள உஸ்மான்பூர் பகுதியை சேர்ந்த கவ்ராஜ் சுக்லா, தீரஜ் சுக்லா, சவுரப் சுக்லா ஆகியோர் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் சம்பவத்தன்று இரவில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டு இருந்தனர்.
இதையும் படிங்க: வயோதிக தம்பதியை திசைதிருப்பி ரூ.4.5 இலட்சம் மதிப்பிலான நகை திருட்டு; அதிர்ச்சி வீடியோ.!!
அச்சமயம் கையில் துப்பாக்கியுடன் இவர்களை மறித்த கொள்ளை கும்பல், இவர்களிடம் இருந்த பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து சென்றனர். துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து உஸ்மான்பூர் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விடியோவை தங்களின் சமூக வளைத்தபக்கத்தில் பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், தலைநகர் டெல்லியின் நிலையை பாருங்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
दिल्ली में कानून व्यवस्था का ये वीडियो देखिए -
— Sachin Gupta (@SachinGuptaUP) September 1, 2024
पिस्टल से लैस बदमाशों ने गौरव शुक्ला, धीरज शुक्ला और सौरभ शुक्ला से कैश, बैग, मोबाइल लूट लिए। ये तीनों हॉस्पिटल से अपने रूम पर लौट रहे थे।
27 अगस्त को लूट हुई। पीड़ित ने ये CCTV फुटेज खुद निकालकर उस्मानपुर थाने की पुलिस को दी है। pic.twitter.com/5kQxqWv4m7
இதையும் படிங்க: சாக்கடைக்குள் விழுந்த தாய், குழந்தை பரிதாப பலி; மகனை இறுக்கப் பிடித்தவாறு சடலமாக மீட்பு.!!