மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாக்கடைக்குள் விழுந்த தாய், குழந்தை பரிதாப பலி; மகனை இறுக்கப் பிடித்தவாறு சடலமாக மீட்பு.!!
தென்மேற்குப்பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்திய பல மாவட்டங்கள் கடுமையான மழைப்பொழிவை எதிர்கொண்டு வருகின்றன. தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கி அவ்வப்போது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கிறது.
டெல்லியில் உள்ள காசிப்பூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்த் சிங். இவர் கிரேட்டர் நொய்டாவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி தனுஜா பிசத் (வயது 23). தம்பதிகளுக்கு 3 வயதுடைய ப்ரியன்ஸ் என்ற மகன் இருக்கிறார். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் அங்குள்ள மார்க்கெட்டுக்கு சென்றுள்ளனர். பின் அங்கிருந்து வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வந்துள்ளனர்.
திறந்து கிடந்த வடிகால் அமைப்பில் விழுந்து பலி
இந்நிலையில், இவர்கள் வீட்டிற்கு வரத்தொங்கியதும் மழை பெய்யத்தொடங்கி, தாழ்வான இடங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. அப்போது, சாலையில் மகனுடன் நடந்து வந்துகொண்டு இருந்த தனுஜா, தனது மகனுடன் திறந்து கிடந்த சாக்கடை வடிகால் அமைப்புக்குள் விழுந்தார்.
இதையும் படிங்க: ஒருசில நொடிகள் தான்.. ஜிம்மில் தொழிலதிபர் மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!
இவர்கள் இருவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், இருவரும் விழுந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள வடிகால் அமைப்பில் சடலமாக மீட்கப்பட்டனர். தனது மகனை தாய் இறுக்கப் பிடித்தவாறு இருவரும் மீட்கப்பட்டனர்.
தகவல் அறிந்து வந்த பெண்ணின் கணவர் தனது மனைவி மற்றும் மகனின் உடலை பார்த்து கதறியழுதார். மேலும், அரசு நிர்வாகம் அலட்சியமாக இருந்ததே தனது குடும்பத்தில் 2 உயிர் பறிபோக காரணமாக அமைந்துள்ளது எனவும் அவர் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.
இதையும் படிங்க: மழைநேரங்களில் கவனம்.. தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி.!