Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
"என்னை பார்த்து சிரிச்சா, கொன்னு கற்பழிச்சிட்டேன்" - சைக்கோ சீரியல் கில்லர் திடுக் வாக்குமூலம்.!
4 க்கும் மேற்பட்ட பெண்களை கொலை செய்து, சீரியல் ரேப்பிஸ்ட் கில்லராக வலம்வந்த 29 வயதுடைய ஹரியானா மாநில இளைஞர், குஜராத் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
குஜராத் மாநிலத்தில் 19 வயது இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
குற்றவாளி கைது, அதிர்ச்சி தகவல்
இதனிடையே, குற்றவாளியாக ராகுல் சிங் ஜாத் (வயது 29) என்ற நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி, அவரை கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திய போது, திடுக்கிடும் தகவல் வெளியானது.
இதையும் படிங்க: கல்லூரி மாணவி 6 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நண்பனை நம்பிச் சென்றபோது நடந்த பயங்கரம்.!
சிரித்ததால் கொலை
அதாவது, இளம்பெண் தனது செல்போனை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்ததாகவும், தன்னைப் பார்த்து சிரித்தது போல இருந்ததால், அவரை ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும், பின் சடலத்துடன் உடலுறவு மேற்கொண்டதாகவும் அதிர்ச்சி தகவல் கூறியுள்ளார்.
பலாத்காரம் & கொலை
மேலும் தான் இதே போல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், ரயில் பயணத்தின் போது 5க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்திருப்பதாகவும், அவர்களில் ஒரு சிலரை பின்தொடர்ந்து சென்று கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வரும் நிலையில், சீரியல் கில்லர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: மின்கட்டணத்தை குறைப்பதாக இளம்பெண் பலாத்காரம்; மின்வாரிய துணைநிலை பொறியாளரின் அதிர்ச்சி செயல்.!