மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வினையான விளையாட்டு.. பூட்டிய காருக்குள் சிக்கி 4 பச்சிளம் பிஞ்சுகள் பரிதாப பலி., பெற்றோர் கதறல்.!
பூட்டிய காருக்குள் சிக்கிக்கொண்ட 4 வயது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பண்ணையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தார் பகுதியை சேர்ந்த வெவ்வேறு தம்பதிகள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களின் 7 குழந்தைகளும், அவரவர் பெற்றோருடன் தங்கி இருக்கின்றனர். பெற்றோர் வேலைக்கு சென்றதும், குழந்தைகள் ஒன்றாக விளையாடுவது இயல்பு என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #BigNews: தொண்டையில் முட்டை சிக்கி முதியவர் நொடியில் பலி; பசி மயக்கம் அவசரம்., விதியை முடித்த சோகம்.!
இதனிடையே, கடந்த சனிக்கிழமை தம்பதிகள் வழக்கம்போல வேலைகளை கவனித்துக்கொண்டு இருந்த நிலையில், அங்கு இருந்த கார் ஒன்றில் குழந்தைகள் ஏறி அமர்ந்து விளையாடி இருக்கிறது. காருக்குள் இவர்கள் எதிர்பார்த்த விதமாக விளையாட்டு ஆர்வத்தில் சிக்கிக்கொண்டனர். ஜன்னலை திறக்கவும் தெரியவில்லை.
குழந்தைகள் நால்வர் பரிதாப மரணம்
இதனால் குழந்தைகள் காலையில் இருந்து மாலை வரை அதில் இருந்த நிலையில், மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 2 வயது முதல் 7 வயதுடைய குழந்தை வரை நால்வரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பின் மாலையில் காரின் ஓட்டுநர் வந்து பார்த்தபோது விபரீதம் புரிந்துள்ளது. பெற்றோரும் குழந்தைகள் வீட்டில் இருப்பார்கள், விளையாட சென்றிருப்பார்கள் என அலட்சியமாக இருந்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த சிறார்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.
વાલીઓ માટે લાલબત્તી સમાન કિસ્સો! અમરેલીમાં ચાર બાળકો રમવા માટે કારમાં બેઠા, બાદમાં ગાડી લોક થઇ જતા ગૂંગળામણથી મોત #Gujarat #BreakingNews #News #Amreli pic.twitter.com/XxCd21ibTE
— Zee 24 Kalak (@Zee24Kalak) November 4, 2024
இதையும் படிங்க: அதிவேகத்தால் துயரம்; குளத்திற்குள் பாய்ந்த கார்.. 8 பேர் பரிதாப பலி.!