மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிவேகத்தால் துயரம்; குளத்திற்குள் பாய்ந்த கார்.. 8 பேர் பரிதாப பலி.!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பலராம்பூர் மாவட்டம், பலராம்பூர் - ராமாநுஜகஞ்ச் சாலையில், கார் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. இந்த கார் சனிக்கிழமை இரவில் ராஜ்பூர் குஷாமி மார்க் பகுதியில் சென்றபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.
8 பேர் பலி
இந்த விபத்தில் கார் குளத்திற்குள் பாய்ந்து மூழ்கிய நிலையில், காரில் இருந்த 8 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
அதிவேகத்தில் சோகம்
நள்ளிரவு நேரத்தில் எஸ்யுவி ரக கார் அதிவேகமாக பயணம் செய்த நிலையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்தில் சிக்கி இருக்கிறது. விபத்தில் 4 ஆண்கள், 2 பெண்கள், பச்சிளம் குழந்தைகள் என 8 பேர் மரணம் அடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: கேரளா எக்ஸ்பிரஸ் இரயில் மோதி 4 தமிழர்கள் மரணம்; துப்புரவு பணியின்போது சோகம்.!
இந்த விஷயம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: #Breaking: அச்சச்சோ என்னாச்சு?.. கேரளா முதல்வரின் உயிர் தப்பியது.. நடந்தது என்ன?.. பகீர் சம்பவம்.!