மனைவி, மகள், 23 வயது இளம்பெண் என மூவர் கொடூர கொலை; காவலர் வெறிச்செயல்., பெங்களூரில் பயங்கரம்.!



in Karnataka Bangalore Mother Daughter Niece Killed by Home Guard 

 

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு, ஜலஹள்ளி கிராஸ், சொக்கசந்திரா பகுதியில் வசித்து வருபவை கங்காராஜு (வயது 42). இவர் கர்நாடக மாநில ஹோம் கார்ட் காவலராக ஹெப்பகோடி காவல் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி பாக்கியா (வயது 36). தம்பதிகளுக்கு நவ்யா (வயது 26) என்ற மகள் இருக்கிறார். இவர்களின் உறவினர் பெண் ஹேமாவதி (வயது 23). 

சம்பவத்தன்று மாலை 4 மணியளவில் கங்காராஜு தனது மனைவி, மகள், உறவினர் பெண் ஹேமாவதி ஆகியோரை கொலை செய்ததாக தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கங்காராஜூவும் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சரணடைந்தார்.

இதையும் படிங்க: Watch: வாலை பிடித்து ஒரே இழு.. சிறுத்தையை தீரத்துடன் பிடித்து வலைக்குள் வீசிய விவசாயி.! வைரல் வீடியோ இங்கே.!

karnataka

சந்தேக வாக்குவாதம் கொலையில் முடிந்தது

காவல் துறையினர் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்தபோது, மூவரும் இரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்துள்ளனர். விசாரணையில், கங்காராஜுவின் மனைவி பாக்கியா, வேறொருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக சந்தேகித்துள்ளார். இதனால் மனைவியின் மீது ஆத்திரம் கொண்ட ராஜு, சம்பவத்தன்று அவரிடம் சண்டையிட்டு இருக்கிறார். 

அப்போது, வாக்குவாதத்தில் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்தவர், அதனை தடுக்க வந்த பாக்கியா, ஹேமாவதி ஆகியோரையும் கத்தியால் தாக்கி கொடூரமாக கொலை செய்து இருக்கிறார் என்பது அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.

இதையும் படிங்க: அலட்சியத்தால் சோகம்.. மின்மோட்டார் வயரை பிடித்த ஒன்றரைவயது குழந்தை மின்சாரம் தாக்கி பலி.!