அலட்சியத்தால் சோகம்.. மின்மோட்டார் வயரை பிடித்த ஒன்றரைவயது குழந்தை மின்சாரம் தாக்கி பலி.!



 Karnataka Davanagere 1 Year Old Baby Dies Electrocution 

கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவனகெரே மாவட்டம், ஒன்னாளி, சொரட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆஞ்சநேயா. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, ஒன்றரை வயதுடைய மகன் மஞ்சு ஆகியோர் இருக்கின்றனர். 

நேற்று காலை நேரத்தில் வழக்கம்போல், ஆஞ்சநேயாவின் மனைவி வீட்டின் தண்ணீர் தொட்டியை நிரப்ப மின் மோட்டாரை இயக்கி இருக்கிறார். பின் அவர் வழக்கம்போல வீட்டில் இருந்த பணிகளை கவனித்து வந்துள்ளார். 

death

மின்சாரம் தாக்கி பலி

இதனிடையே, வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை, மின் மோட்டாருக்கு அருகில் சென்று வயரை பிடித்து இருக்கிறார். இதனால் அவரின் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாட்டு; 3 சிறார்கள் இரயிலில் அடிபட்டு பலி.!

சத்தம் கேட்டு பதறியபடி வந்த தாய் பார்த்தபோது, மஞ்சு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில், மின் மோட்டரை சுற்றிலும் பாதுகாப்பு உபகரணம் இன்றி வயர் தொங்கிக்கொண்டு இருந்ததால், குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அம்பலமானது.

இதையும் படிங்க: Watch: விடுமுறையில் சொந்த ஊருக்கு புறப்பட்டு, சடலமான காவலர்; இரயிலில் ஏறும்போது செல்போனில் பேசி விபரீதம்.!