புகார் கொடுக்க வந்த பெண்ணை பாத்ரூமூக்கு அழைத்து பாலியல் சீண்டல்; டிஎஸ்பி வீடியோ லீக்.!



  in karnataka tumkur dsp sexual harassment to complaint girl 

நிலம் தொடர்பான விவகாரத்தில் புகார் கொடுக்க வந்த பெண்ணை, டிஎஸ்பி கழிவறைக்கு அழைத்துக் சென்று அத்துமீறிய கொடுமை கர்நாடகாவில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் மாவட்டம், மதுகிரி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ராமச்சந்திரன். சம்பவத்தன்று இவரிடம் பின் ஒருவர் நிலம் தொடர்பான வழக்கு குறித்து புகார் அளிக்க வந்தார். 

புகார் கொடுக்க வந்த பெண்

அப்போது, டிஎஸ்பி ராமச்சந்திரன் பெண்ணை கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த விஷயம் தொடர்பான அதிர்ச்சி காட்சிகள், அங்கு இருந்த வேறொரு நபரால் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தந்தை, தாத்தா, மாமா என குடும்பமாக சேர்ந்து சொந்த மகளை சீரழித்த கொடுமை.. ஓராண்டாக அதிர்ச்சி செயல்.!

வீடியோ வைரல்

இந்த விஷயம் தொடர்பான வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது. 

சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி, ஒவ்வொரு குடிமக்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அதிகாரியே, தனது அதிகாரத்தை வைத்து பெண்ணிடம் அத்துமீறிய சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நடுரோட்டில் நடந்து சென்ற இளைஞருக்கு ஏற்பட்ட கொடூரம்.. பொதுமக்கள் உதவி.!