வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
நடுரோட்டில் நடந்து சென்ற இளைஞருக்கு ஏற்பட்ட கொடூரம்.. பொதுமக்கள் உதவி.!
நடந்து சென்ற இளைஞர்
கர்நாடக மாநிலத்தில் ஒரு இளைஞரை மர்ம கும்ப கும்பல் ஒன்று நடுரோட்டில் ஓட ஓட வெட்டி கொலை செய்ய முயற்சித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி நகரின் வாட்டர் டேங்க் பகுதியில் மாருதி என்ற அந்த இளைஞர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
கொலை முயற்சி
அப்போது தான் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திடீரென அவரை சூழ்ந்து கொண்ட அந்த மர்ம கும்பல் கத்தியை கொண்டு கடுமையாக மாருதியை தாக்கி இருக்கின்றனர். பொதுமக்கள் வேகமாக ஓடி வந்து எச்சரித்த நிலையில், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறது.
இதையும் படிங்க: காம வெறி பிடித்த மாமனார்... ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள் படுகொலை.!!
சிகிச்சையில் மாருதி
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மாருதி அக்கம் பக்கத்தில் இறந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றார். இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
முன்விரோதம்
இந்த நிலையில், அவர்கள் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக மாருதியின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருமணமான 2 ஆண்டுக்குள் மனைவி டார்ச்சர்.. தலைமை காவலர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை.!