"அவன்கூட வேண்டாம் னு சொன்னா கேட்கலை" - மனைவியை உயிருடன் எரித்துக்கொன்ற கணவர்; பரபரப்பு வாக்குமூலம்.!



  in Kerala Husband Killed Wife by Burn Alive 

நண்பருடன் கொண்ட பழக்கத்தை கைவிடும்படி கோரிக்கை வைத்தும் கேட்காத காரணத்தால், கணவர் மனைவியை எரித்துக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியில் வசித்து வருபவர் பத்மராஜன். இவரின் மனைவி அனிலா. பத்ரமராஜனின் இரண்டாவது மனைவியான அனிலா, பேக்கரி ஒன்றை நடத்தி வந்துள்ளார். தம்பதிகள், பத்மராஜனின் 14 வயதுடைய மகளுடன் அசித்து வருகிறார். 

பார்ட்னர்ஷிப் பேக்கரி கடை

அனிலாவின் நண்பரான ஹனீஷுடன் இணைந்து, அங்குள்ள பகுதியில் அனிலா புதிதாக பேக்கரி தொடங்கி இருக்கிறார். இந்த விவகாரத்திற்கு பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: காதல் திருமணம் செய்ததால் கொடூரம்; பெண் காவலர் ஆணவக்கொலை.. கழுத்தறுத்து வெறிச்செயல்.!

Murder

நட்பை கைவிட கோரிக்கை

இந்த விஷயம் பத்மராஜூனுக்கு தெரியவரவே, அவர் மனைவியை கண்டித்து ஹனீஷுடன் நட்பை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனால், அவர் கேட்கவில்லை. இதனையடுத்து, நேற்று பத்மராஜன் கொல்லம், சம்மமுக்கு பகுதியில் காத்திருந்தார். 

ஆத்திரத்தில் கொலை

அப்போது காரில் வந்த மனைவியின் வாகனத்தை நிறுத்தி, அனிலாவின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்துள்ளார். பின் அவர் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்து, மனைவியிடம் நட்பை கைவிடுமாறு அறிவுறுத்தியும் கேட்காததால் இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். தற்போது பத்மராஜன் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: "என்னை பார்த்து சிரிச்சா, கொன்னு கற்பழிச்சிட்டேன்" - சைக்கோ சீரியல் கில்லர் திடுக் வாக்குமூலம்.!