நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
இறந்த பின் திடீரென உயிர்த்தெழுந்த நபர்; ஆம்புலன்சில் ஆடிப்போன உறவினர்கள்.!

கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டம், கொட்டுபரம்பா, பச்சைபோல்கா பகுதியில் வசித்து வந்தவர் பவித்ரன் (வயது 67). சம்பவத்தன்று இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மருத்துவ சிகிச்சையின் போது அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெண்டிலேட்டர் அகற்றப்பட்ட பின்னர் அவர் அசைவின்றி கிடந்ததால், அவர் இறந்திருக்கலாம் என கருதப்பட்டுள்ளது.
இறந்ததாக கருதப்பட்டவர் எழுந்தார்
இதனால் உடல் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின் வீட்டிற்கு எடுத்துச்செல்ல அவசர ஊர்தியில் ஏற்றப்பட்டது. அப்போது, அவரின் கைகள் திடீரென அசையவே, உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: ஆம்புலன்சுக்கு வழிவிட மறுத்ததால் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்; பதறவைக்கும் காட்சிகள்.!
அணில் இறந்துவிட்டார் என உறவினர்களுக்கு சேதி கொடுத்து, அவர்கள் மருத்துவமனை மற்றும் வீட்டில் குவியத் தொடங்கிய நிலையில், அவர் எழுந்ததால் உறவினர்கள் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளகிப்போயினர்.
இதையும் படிங்க: அம்மாவை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மகன்; போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து திரும்பி வந்ததும் சோகம்.!