இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
ஆம்புலன்சுக்கு வழிவிட மறுத்ததால் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்; பதறவைக்கும் காட்சிகள்.!

கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர், மட்டனூர் கலர் ரோடு டி.பி.ஹவுஸ் பகுதியில் வசித்து வந்தவர் டி.பி சூபி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவரின் மனைவி ரூக்கியா (வயது 61). இவர் தற்போது தனது பிள்ளை வீட்டில் வசித்து வருகிறார்.
இதனிடையே, சம்பவத்தன்று ரூக்கியாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர ஊர்திக்கு குடும்பத்தினர் தொடர்பு கொண்ட நிலையில், விரைந்து வந்த பணியாளர்கள், ரூக்கியாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவசர ஊர்தி தலச்சேரி மருத்துவமனைக்கு பயணம் செய்தது.
தாமதமாக மருத்துவமனை சென்றதால் சோகம்
உயிர்காக்கும் அவசரம் என்பதால், அவசர ஊர்தி ஊழியர் விரைந்து வாகனத்தை செலுத்தி இருக்கிறார். அப்போது, சொகுசு காரில் வந்த நபர்கள், அவசர ஊர்திக்கு வழிவிட மறுப்பு தெரிவித்து, வாகனத்தை இயக்கி இருக்கிறார். இதனால் 30 நிமிடங்கள் தாமதமாக அவசர ஊர்தி மருத்துவமனைக்கு சென்றுள்ளது.
இதையும் படிங்க: காட்டுக்குள் ஆடு மேய்க்கச் சென்று நடந்த சோகம்; பெண் யானை தாக்கி பலி.!
இதனால் அவசர ஊர்திக்கு வழிவிட மறுப்பு தெரிவித்த கார் குறித்து அவசர ஊர்தி ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே, மருத்துவமனைக்கு தாமதமாக வந்த காரணத்தால், ரூக்கியா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சியும் வெளியாகியுள்ளது.
കണ്ണൂരില് ഹൃദയാഘാതം വന്ന രോഗിയുമായി ആശുപത്രിയിലേക്ക് പോകുന്ന ആംബുലന്സിന്റെ വഴിമുടക്കുന്ന കാറിന്റെ ദൃശ്യം pic.twitter.com/Q3tNKqH6Tt
— Samakalika Malayalam (@samakalikam) January 17, 2025
இதையும் படிங்க: அணையில் தவறி விழுந்து 3 சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்; நீரில் மூழ்கி பரிதாப பலி.!