கொதிக்கும் எண்ணெயில் விழுந்து 2 வயது சிறுவன் மரணம்; விளையாட்டு வினையான சோகம்.. சுப நிகழ்ச்சியில் துயரம்.!



in Madhya Pradesh 2 year old Boy Dies 

 

சமையல் அறைக்குள் வந்து விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன், கொதிக்கும் நீரில் விழுந்து பலியான சோகம் நடந்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலில், 2 வயதுடைய குழந்தை தவறுதலாக கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் விழுந்து பலியான சோகம் நடந்துள்ளது. போபாலில் உள்ள நிசாத்புரா பகுதியில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் இந்த சோகம் நடந்துள்ளது. குடும்பத்தினர் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் வேலைகளை கவனித்துக்கொண்டு இருந்தபோது, 2 வயதுடைய சிறுவன் சமையல் அறைக்குள் சென்று, அங்கு கொப்பரையில் கொதி நிலையில் வைக்கப்பட்டு இருந்த எண்ணெய் கொப்பரையில் தவறி விழுந்தார்.  

இதையும் படிங்க: நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்; நொறுங்கிய பல்சர்.. 3 பேர் பரிதாப பலி.!

2 வயது சிறுவன் பலி

போபாலில் உள்ள சஹால மந்திர் பகுதியில் வசித்து வரும் ராஜேஷ் சாகு, தனது மனைவியுடன் உறவினரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். இருவருக்கும் 7 மற்றும் 2 வயதுடைய குழந்தைகள் இருக்கின்றனர். நிச்சயதார்த்த நிகழ்ச்சியின்போது குழந்தைகளை இல்லையடா அனுமதித்து, தம்பதிகள் பிற பணிகளை கவனித்து வந்துள்ளனர். அப்போது, ராஜேஷின் 2 வயதுடைய மகன் அக்ஷத், சமையல் அறைக்கு சென்று எண்ணெய் கொப்பரையில் விழுந்து இருக்கிறார்.

Madhya pradesh 

சமையல் அறையில் விளையாடியதால் சோகம்

எண்ணெய் கொதிநிலையில் இருந்ததால், சிறுவன் கடுமையான தீக்காயத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். சிறுவனை மீட்ட பெற்றோர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதி செய்யவே, அங்கு சிறுவனின் மரணம் உறுதி செய்யப்பட்டது. சிறார்கள் சமையல் அறையில் கதறிக்கொண்டு அழுவதை பார்த்த உறவினர்கள், அங்கு சென்று பார்த்தபோதுதான் விபரீதம் புரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியி பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் உண்டாக்கியது. 

இதையும் படிங்க: காதல் வயப்பட்ட மகளை காவலர்கள் கண்முன்னே சுட்டுக்கொன்ற தந்தை; ஆணவ வெறியில் உச்சகட்ட கொடூரம்.!