காதல் வயப்பட்ட மகளை காவலர்கள் கண்முன்னே சுட்டுக்கொன்ற தந்தை; ஆணவ வெறியில் உச்சகட்ட கொடூரம்.!



in Madhya Pradesh Gwalior Daughter Killed by Father 

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ் குர்ஜர். இவரின் மனைவி பானு. தம்பதிகளின் மகள் டானு. இவருக்கும், மகேஷ் என்பவருக்கும் இடையே திருமணம் நடக்க பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆனால், டானு விக்கி என்ற நபரை காதலித்து வந்த நிலையில், அவரை திருமணம் செய்ய விரும்பி இருக்கிறார். தனது விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்தபோது, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை; காவல்துறை விசாரணை.!

Madhya pradesh 

பெண் சுட்டுக்கொலை

மேலும், தாங்கள் சொல்லும் நபரையே நீ திருமணம் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இந்த விசயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், டானு - மகேஷ் திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனால் டானு வீடியோ பதிவு செய்து இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளார். 

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், மகேஷின் வீட்டிற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். அப்போது, ஆத்திரமடைந்த மகேஷ், தனது சொந்த மகளை காவல்துறையினர் கண்முன் சுட்டுக்கொலை செய்தார். இந்த சம்பவத்திற்கு மகேஷ் குர்ஜரின் மகனும் உடந்தையாக இருந்துள்ளார். 

20 வயது பெண்ணின் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: லிவிங் டுகெதர் காதலி கொலை.. 9 மாதமாக பிரிட்ஜில் சடலம்.. மின்சார துண்டிப்பால் வீசிய துர்நாற்றம்.!!