திருமணமான 2 மாதத்தில் இரண்டாவது திருமணம்.. மனைவிக்காக கதறிய கணவன்., டேக்கா கொடுத்த இளம்பெண்.!



in Madhya Pradesh girl married Backto Back within 2 Months 

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் பகுதியை சார்ந்தவர் ரோகித். இவருக்கும் அதே பகுதியை சார்ந்த ரோகினி பெண் ஒருவருக்கும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது.

திருமணம் முடிந்ததைத்தொடர்ந்து, புதுமணத் தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இதனிடையே, திடீரென ஒருநாள் ரோகினி மாயமானார். இதனால் பதறிப்போன கணவர், மனைவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

இதையும் படிங்க: மறக்க முடியுமா? 40 ஆண்டுகளுக்கு முன் நடந்த போபால் விஷவாயுக்கசிவு.. 1000+ உயிர்கள் காவு வாங்கிய துயரம்.!

Madhya pradesh

காவல் நிலையத்தில் புகார்

பின் மனைவி மாயமானது குறித்து ரோகித் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதிகாரிகள் இதன்பேரில் விசாரணை நடத்திய நிலையில், அவர் இரண்டாவதாக ராகுல் என்ற நபரை திருமணம் செய்து வாழ்ந்து வருவதாக கூறி இருக்கிறார். 

கணவன் வேண்டாம்., கள்ளக்காதலன் வேண்டும்

மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த அழைத்து ரோஹித் கோரிக்கை வைக்க, ராகுல் தரப்பு வாயை திறந்தால் அங்கு வாக்குவாதம் உண்டாகியது. 

தொடர்ந்து காவல் நிலையத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, எனது இரண்டாவது கணவர் ராகுலுடன் நான் செல்ல விரும்புகிறேன் என கூறியுள்ளார். 

இதனால் அதிகாரிகளும் செய்வதறியாது திகைத்த நிலையில், இறுதியில் ரோகித் ஏமாற்றத்துடன் சென்றார். பெண் ராகுலுடன் புறப்பட்டுச் சென்றார். 

இதையும் படிங்க: காதலியை சுட்டுக்கொன்று கடைசி நேரத்தில் மனம் மாறிய காதலன்; பறிபோன உயிர்., பரிதவிப்பில் குடும்பம்.!