ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
காதலியை சுட்டுக்கொன்று கடைசி நேரத்தில் மனம் மாறிய காதலன்; பறிபோன உயிர்., பரிதவிப்பில் குடும்பம்.!
தற்கொலை எண்ணத்தில் காதலி உயிரிழந்ததும் திடீரென பின்வாங்கிய காதலன், காதலியை சுட்டுக்கொன்றதாக கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் பகுதியைச் சார்ந்தவர் சச்சின் யாதவ். இவருக்கு சமூக வலைத்தளம் வாயிலாக மீரா என்ற பெண்ணின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே நட்பாக தொடங்கிய பழக்கமானது, பின்னாளில் காதலாக மாறியது.
காதல் ஜோடி
இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இருவரின் காதல் விவகாரமும் இருதரப்பு பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், அவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இவர்கள் நம்மை வாழ விட மாட்டார்கள் என்று காதல் ஜோடி முடிவெடுத்தது.
இதையும் படிங்க: "எப்படித்தான் மனசு வந்துச்சோ.." பிஞ்சு குழந்தைகள் கொலை.!! உயிர் பிழைத்த தாய்.!!
தற்கொலை திட்டம்
இந்த விஷயம் காதல் ஜோடியை கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய நிலையில், காதல் ஜோடி தற்கொலை செய்வதற்காக ஒப்பந்தம் போட்டதாக தெரிய வருகிறது. இவர்களின் திட்டப்படி சச்சின் தனது வீட்டிற்கு மீராவை அழைத்து வந்து தலையில் சுட்டுக்கொலை செய்தார்.
மனமாற்றத்தால் அதிர்ச்சி
பெண்ணை சச்சின் சுட்டுக்கொலை செய்து, தானும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால், திடீரென மனம் மாறிய சச்சின், அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். துப்பாக்கி சத்தம் கேட்டு அதிர்ந்து போன அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மீராவின் சடலத்தை மீட்டனர். மேலும், அவரை கொலை செய்ததாக தப்பிச் சென்ற சச்சினை கைது செய்தனர்.
இந்த விஷயம் பெண் வீட்டாருக்கு கடும் அதிர்ச்சியை தந்துள்ளது.
இதையும் படிங்க: திரைப்பட பாணியில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்த காவல்துறை; பதறவைக்கும் காட்சிகள்.!