மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை; காவல்துறை விசாரணை.!



  in Madhya Pradesh College Student Dies 

மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள சத்தர்பூர் பகுதியில் வசித்து வருபவர் இந்திரா குப்தா. இவரின் மகள் தீக்சா (வயது 26). இவர் அப்பகுதியில் இருக்கும் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 

அங்குள்ள கல்லூரி ஒன்றில், இறுதி ஆண்டு நுண்ணுயிரியல் இளங்கலை பட்டம் பயின்று வருகிறார். இதனிடையே, வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவி கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். 

மருத்துவமனையில் பலி

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு நடந்த பரிசோதனையில் பெண் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: "அம்மா, அப்பா மன்னிச்சிருங்க, நான் நல்ல மகள் இல்லை" - கடிதம் எழுதி வைத்து மாணவி தற்கொலை.!

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மாணவியின் தற்கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் டிரேடிங்கில் பணம் இழப்பு; 29 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.!