மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண்ணிமைக்கும் நேரத்தில் 7 பேரின் உயிரை பறித்த எமன்; அப்பளம் போல நொறுங்கிய ஆட்டோ.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சத்தர்பூர் மாவட்டம், கஜீராஹோ - நான்சி நெடுஞ்சாலையில், பாகேஸ்வர் நகர் நோக்கி ஆட்டோ ஒன்று இன்று அதிகாலை நேரத்தில் பயணம் செய்தது. ஆட்டோவில் 13 பேர் பயணம் செய்தனர்.
இதே சாலையில், பழுதாகி இருந்த லாரி ஒன்று, சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தது. ஆட்டோ ஓட்டுநர் அதிகாலை நேரத்தில் வேகமாக பயணம் செய்ததாக தெரியவருகிறது. அப்போது, சாலையோரம் இருந்த லாரியை கவனிக்கவில்லை.
நொடிப்பொழுதில் நடந்த சோகம்
இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ லாரியின் பின்பக்கம் பயங்கர வேகத்தில் மோதி இருக்கிறது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 1 வயது குழந்தையும் அடங்கும்.
இதையும் படிங்க: கோவில் வளாகத்தின் சுவர் இடிந்து விழுந்து சோகம்; 9 பேர் பரிதாப பலி.!
மேலும், 6 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் காவல்துறையினர் உதவியுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நண்பன் திரைப்படம் பாணியில் பிரசவம்; இரட்டைக்குழந்தைகளை ஈன்றெடுத்த பெண்மணி.!