மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நண்பன் திரைப்படம் பாணியில் பிரசவம்; இரட்டைக்குழந்தைகளை ஈன்றெடுத்த பெண்மணி.!
ஷங்கர் இயக்கத்தில், நடிகர்கள் விஜய், ஜீவா, பிரசாந்த், இலியானா, சத்யராஜ் உட்பட பலர் நடிக்க வெளியான திரைப்படம் நண்பன். இப்படத்தி பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு, நடிகர் விஜய் செல்போன் மூலமாக தனது காதலி கூறும் ஆலோசனையை கேட்டு பிரசவம் பார்ப்பார்.
அந்த காட்சிகளை போல மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள சியோனி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, மாவட்டம் வெள்ளத்தில் சிக்கி இருக்கிறது. மாவட்டத்தில் உள்ள ஜோராவாடி கிராமமும் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளது.
வெள்ளத்தினால் அவதி
ஊருக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் அவதிப்பட, கிராமத்தை சேர்ந்த ரவீனா யுகே என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏறட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் குடுமப்த்தினரால் அழைத்து செல்ல முடியவில்லை.
இதையும் படிங்க: காதலிக்கு கிப்ட் வாங்க ஏடிஎம்மில் நூதன திருட்டு; சிறார்களின் அதிர்ச்சி செயல்.!
செல்போன் மூலமாக மாவட்ட அரசு மருத்துவமனையை தொடர்புகொண்ட ரவீனாவின் கணவர் தெரிவித்த தகவலின்பேரில், மாவட்ட சுகாதார அதிகாரி மற்றும் பெண் மருத்துவர் மனிஷா, மருத்துவ குழுவினரால் கிராமத்திற்கு செல்ல முயன்றும் பலனில்லை.
மருத்துவரின் அறிவுரையில் பிரசவம்
இதனையடுத்து, கிராமத்து மருத்துவச்சியை மருத்துவர்களின் ஆலோசனைப்படி தங்களின் வீட்டிற்கு வரவழைத்த மருத்துவர்கள், செல்போனில் மருத்துவர்கள் கூறிய வழிமுறையின் பேரில் பிரசவம் பார்க்கப்பட்டது. இதன்பேரில் ரவீணாவுக்கு இரட்டைக்குழந்தைகள் பிறந்தன.
குழந்தைகளும், தாயும் நல்ல உடல்நலத்துடன் இருக்கும் நிலையில், வெள்ளம் வடிந்த பின்னர் ஒருநாள் கழித்து மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதையும் படிங்க: அடேங்கப்பா... ரூ.19.51 இலட்சம் கொடுத்து பேன்சி நம்பர் பிளேட் வாங்கிய நபர்; ரொம்ப ராசியான நம்பர் போல.!