வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
வீட்டில் தனியாக இருந்த 4 வயது சிறுமி பலாத்காரம்; புத்தாண்டு அன்று கொடூரம்..!
27 வயதுடைய இளைஞர், வீட்டில் சிறுமி தனியாக இருப்பதை தனக்கு சாதகமாக்கி பலாத்காரம் செய்த துயரம் நடந்துள்ளது.
மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பை, கிழக்கு புறநகர் பகுதியில் 4 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் இருவரும் வேலை பார்த்து வருகிறார்கள். இதனிடையே, புத்தாண்டு அன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதனை நோட்டமிட்ட 27 வயதுடைய நபர், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று விளையாடலாம் என கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதுகுறித்து அம்மாவிடம் கூறக்கூடாது, கூறினால் கொலை செய்திடுவேன் என மிரட்டி அனுப்பி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: தேர்வெழுதி வீட்டிற்கு திரும்பிய 7 வயது சிறுமி பலாத்காரம்; இளைஞர் அதிர்ச்சி செயல்.!
சிறுமி பலாத்காரம்
இரவு 07:30 மணியளவில் வீட்டிற்கு வந்த தாயிடம் மகள் அழுதபடி அந்தரங்க பகுதி வலிப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ந்துபோன தாய் சோதித்தபோது, மகள் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளார். பின் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல்துறையினர் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, 27 வயதுடைய நபரை கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில் சிறுமியை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொள்ளவே, அவரின் மீது போக்ஸோவில் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பள்ளி வளாகத்தில் குழந்தை பெற்ற 16 வயது சிறுமி; விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!