தேர்வெழுதி வீட்டிற்கு திரும்பிய 7 வயது சிறுமி பலாத்காரம்; இளைஞர் அதிர்ச்சி செயல்.!



  Rajasthan School 2nd Girl Student Rape 

பள்ளி நிறைவு பெற்றதும் வீட்டிற்கு திருப்பிய சிறுமி, மர்ம நபரான இளைஞரால் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாககவுர் மாவட்டம், இந்திரா நகரில் 7 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். பள்ளியில் நடைபெற்ற அரையாண்டு தேர்வு எழுத சிறுமி சென்றிருந்த நிலையில், வகுப்புகள் நிறைவுபெற்று சம்பவத்தன்று வீட்டிற்கு வந்துகொண்டு இருந்தார். 

பேருந்தில் கீழே இறங்கியவர், வீடு நோக்கி பயணம் செய்தார். அப்போது, அங்கிருந்த இளைஞர் ஒருவர், சிறுமியிடம் பேச்சு கொடுத்துள்ளார். பின் மாணவியை மறைவான பகுதிக்கு அழைத்துச்சென்றவர், பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இதையும் படிங்க: பள்ளி வளாகத்தில் குழந்தை பெற்ற 16 வயது சிறுமி; விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

சிறுமி பலாத்காரம்

கயவனின் பிடியில் சிக்கிய மாணவி, மயங்கிய நிலையில் இரத்த காயத்துடன் கிடந்துள்ளார். இளைஞனும் பலாத்காரத்திற்க்கு பின் தப்பிச் சென்றார். பலமணிநேரம் கழித்து மயக்கம் தெளிந்த சிறுமி, வீட்டிற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார். 

இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர், சிறுமியை மருத்துவ சிகிச்சைக்காக அஜ்மரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதி செய்தனர். மேலும், இதுகுறித்து இந்திரா நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரியவரவே, அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர். குற்றவாளிக்கு வலைவீசப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நெஞ்சமெல்லாம் பதறுதே.. கை-கால்களை உடைத்து., 4 வயது சிறுமி பலாத்காரம் & கொலை; ரணகொடூரம்..!