கார்களை தாக்கி கொள்ளையடிக்கும் கும்பல்; நள்ளிரவில் ஐடி ஊழியரின் குடும்பத்துக்கு நேர்ந்த பகீர் சம்பவம்.!



in Maharashtra Pune Road Rage Gang Robbery Attempt 

 

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமப்புற சாலைகளில், நள்ளிரவு நேரங்களில் கார் உட்பட வாகனங்களில் பயணம் செய்வோரை குறிவைத்து, திருட்டுக்கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி வழிப்பறி செய்வது தொடர்ந்து வருகிறது. இவ்வாறான கும்பல் டூவீலர் மற்றும் கார் போன்ற வாகனங்களை குறிவைத்து தாக்குகின்றனர். 

கொள்ளையே அவர்களின் முதல் குறிக்கோள்:
காரில் பயணம் செய்வோர் விபத்தில் சிக்கினால், உடனடியாக அவர்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுவிடுவார்கள். அதனால் கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள். மேலும், விபத்தில் உயிருக்காக துடிதுடித்தாலும், அவர்களின் நோக்கம் கொள்ளையடிப்பது மட்டுமே என்பதால், கொள்ளை செயலை அரங்கேற்றி தப்பி சென்றுவிடுவார்கள். 

இதையும் படிங்க: நாயின் மீது கார் ஏற்றிக்கொலை; 25 வயது இளைஞர் கைது..!

புனேவை சேர்ந்த ஐடி ஊழியர்

இவ்வாறான சம்பவங்கள் முந்தைய காலங்களில் நடந்து, பின் காவல்துறையினரின் கடுமையான கெடுபிடியால் குறைந்தது. இதனிடையே, தற்போது அவை மீண்டும் நடக்க தொடங்கியுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியைச் சேர்ந்தவர் ரவி கர்னானி. இவர் ஐடி ஊழியர் ஆவார். 

அதிஷ்டவசமாக தப்பினர்

சம்பவத்தன்று தனக்கு சொந்தமான காரில் அவர் குடும்பத்துடன் லவாலே - நண்டே சாலையில் சென்றுகொண்டு இருந்தார். அச்சமயம், அவரின் காரை கும்பல் ஒன்று முதலில் பயங்கர ஆயுதங்களால் தாக்கி நிறுத்த முயற்சித்தது. சுதாரிப்புடன் காரை இயக்கியவர், தொடர்ந்து கும்பலிடம் சிக்காமல் பயணித்தார். 

ஆனால், காரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல், கத்தி போன்ற ஆயுதத்தால் காரை தாக்கியது. அவர்களிடம் இருந்தும் தப்பிச் சென்ற நிலையில், வேறொரு கிராமத்தில் இக்கும்பலுக்கு ஆதரவானவர்கள், காரை திடீரென தாக்க முற்பட்டனர். நல்வாய்ப்பாக அங்கிருந்தும் தப்பியவர்கள் பத்திரமாக வீடு சென்று சேர்ந்தனர். தற்போது இந்த சம்பவத்தின் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. 

பதறவைக்கும் வீடியோ

இதையும் படிங்க: துயரமே வாழ்க்கையின் முடிவாக அமைந்ததால் சோகம்.. 28 வயது இளம்பெண் விபத்தில் பலி.. குடிகாரனால் நடந்த துயரம்.!