மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாயின் மீது கார் ஏற்றிக்கொலை; 25 வயது இளைஞர் கைது..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, சமந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் ருத்ரல் விஸ்வகர்மா (வயது 25). இவர் சம்பவத்தன்று கந்திவலி கிழக்கு, லோகாண்ட்வாலா பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு நாய் ஒன்றை கார் ஏற்றி கொலை செய்துள்ளார்.
அதாவது, தனது காருக்கு இடையே சிக்கிக்கொண்டு தவித்த நாயை அவர் காப்பாற்ற முயலாமல் காரை ஏற்றிக்கொலை செய்தார். இந்த விஷயம் குறித்து நிதி ஹெட்ஜ் என்ற வழக்கறிஞர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, ருத்ரலின் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: துயரமே வாழ்க்கையின் முடிவாக அமைந்ததால் சோகம்.. 28 வயது இளம்பெண் விபத்தில் பலி.. குடிகாரனால் நடந்த துயரம்.!
காவல்துறையினர் விசாரணை
அதனைத்தொடர்ந்து, அதிகாரிகள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நாயை கொன்றதாக ருத்ரளை கைது செய்தனர். நாயை கொலை செய்த சம்பவம் நேற்று இரவு 08:50 மணியளவில் நடைபெற்றுள்ளது.
கார் ஏற்றப்பட்டதில் நாய் படுகாயமடைந்த நிலையில், அதனை காப்பாற்ற உடனடியாக கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டபோதிலும் நாயின் மரணம் உறுதி செய்யப்பட்டது. உரிய ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டதைத்தொடர்ந்து, சர்ச்சைக்குரிய செயலில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: #BigBreaking: 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; நீதிகேட்ட போராட்டத்தில் கல்வீச்சு.. பதற்றம்.!