மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துருப்பிடித்த இரும்பு கேட்.. பள்ளிக்குள் நுழைந்த 13 வயது சிறுவனுக்கு எமனாக மாறிய சோகம்..! கண்ணீரில் பெற்றோர்.!
இரும்பு கேட் சிறுவனின் மீது விழுந்து உயிர் பிரிந்த சோகம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் மாவட்டம், கர்விர் தாலுகா, கேர்லெ கிராமத்தில் கன்யா குமார் வித்யாமந்திர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், கார்லே கிராமத்தை சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஸ்வரூப் தீபக்ராஜ் மானே என்ற சிறுவன், 6ம் வகுப்பு பயின்று வருகிறார்.
சிறுவன் பலி
சிறுவன் நேற்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற நிலையில், பள்ளியின் வாசல் இரும்புக் கதவு, சிறுவன் மீது விழுந்துள்ளது. கதவு துருப்பிடித்து இருந்த நிலையில், அது பாரம் தாங்காமல் நெரித்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் சிறுவன் படுகாயமடைந்தார்.
இதையும் படிங்க: 4 வயது சிறுவன் மூச்சுத்திணறி பலி., சுவிங்கம்தானே என அலட்சியமா? பெற்றோர்களே கவனம்.!
பள்ளிக்கு வந்த சில நிமிடங்களில் சோகம்
உடனடியாக சிறுவனை மீட்ட பள்ளி நெய்வகம் மருத்துவமனையில் அனுமதி செய்ய, அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவன் தினமும் அவரின் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம். வழக்கம்போல, இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கு கொண்டுவந்துவிட்டுச் சென்றபோது இந்த சோகம் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: வினையான விளையாட்டு.. பூட்டிய காருக்குள் சிக்கி 4 பச்சிளம் பிஞ்சுகள் பரிதாப பலி., பெற்றோர் கதறல்.!