மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி கழிவறையில் 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை; போராடிய மக்கள் மீது காவல்துறை தடியடி.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, படலாப்பூர் பகுதியில் 4 வயதுடைய யுகேஜி பயிலும் சிறுமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையில் பாலியல் தொல்லையை எதிர்கொண்டார். சிறுமி பயிலும் பள்ளியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
மக்கள் போராட்டம்
இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, அதிகாரிகள் புகாரை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இன்று நீதிகேட்டு அங்குள்ள மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்திய நிலையில், இரயில் நிலையத்திலும் மறியல் சம்பவம் நடைபெற்றது.
இதையும் படிங்க: கலியுகத்தில் எத்தனை கொடுமை?.. 6 வயது சிறுமி, ஆடு பலாத்காரம்.. கிழட்டு காமுகன் அட்டூழியம்..!
இதனையடுத்து, தூய்மை பணியாளர் அக்ஷய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், 2 காவலர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். எனினும் மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இரயில் நிலையத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
காவல்துறையினர் தடியடி
இதனால் அங்கு பதற்றமான சூழல் உண்டாகவே, கூடுதல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில், இரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை, காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதனால் ஆவேசமடைந்த சிலர், தண்டவாளங்களில் இருந்த கற்களை எடுத்து காவல்துறையினர் மீது வீசியும் தாக்குதல் நடத்தினர்.
#WATCH | Maharashtra | Police resort to lathi-charge to disperse protestors gathered at Badlapur railway station to protest against alleged sexual assault with a girl student pic.twitter.com/sAUn6bKhp2
— ANI (@ANI) August 20, 2024
இதையும் படிங்க: 8 வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை; எச்.எம்-மின் படுகேவல செயல்..!