மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
8 வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை; எச்.எம்-மின் படுகேவல செயல்..!
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனந்தப்பூர் மாவட்டம், அதிமூர்த்தி நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக ஆஞ்சநேயலு கவுட் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார்.
இப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் மாணவியை, தலைமை ஆசிரியர் அவ்வப்போது தனது அறைக்கு அழைத்துச்சென்று பேசி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுமியை சாக்லேட் வாங்கித்தருவதாக ஆஞ்சநேயலு தனது அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.
மாணவிக்கு உடல்நலம் பாதிப்பு;
அங்கு சிறுமிக்கு சாக்லேட் கொடுத்தவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருக்கிறார். பின் இதனை யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி அனுப்பி அனுப்பி வைத்திருக்கிறார். இதனிடையே, வீடு திரும்பிய மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட காரணத்தால், அவரிடம் பெற்றோர் கேட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் வாயில் துணையைப்பொத்தி பெண் பலாத்காரம்; தப்பியோடிய ஓட்டுநர்.!
பெற்றோர் புகார்
அச்சமயம் சிறுமி தனது தலைமை ஆசிரியர் நடந்துகொண்ட விதத்தை கூற, உண்மையை அறிந்த பெற்றோர் சிறுமியை மருத்துவமனையில் அனுமதி செய்தனர். மேலும், காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆஞ்சநேயலுவை கைது செய்தனர். விசாரணையில், கயவன் சிறுமியைப்போல பல மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது அம்பலமானது. விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்... 8 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.!! கால்வாயில் வீசப்பட்ட உடல்.!!