பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
#Breaking: புதுச்சேரியில் பேரதிர்ச்சி.. ரௌடிகள் மூவர் வெட்டிப்படுகொலை..!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரெயின்போ நகர், 7 வது குறுக்குத்தெரு பகுதியில் 3 இளைஞர்களின் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்தது. தகவல் அறிந்த காவல்துறையினர் வந்து சோதித்ததில் இருவர் உயிரிழந்தது உறுதியானது.
இதையும் படிங்க: ஆன்லைன் லோன் மோசடி; ஆபாசமாக சித்தரித்து ரூ.300 கோடி பணம் பறிப்பு.!
மூவர் கொலை
ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெரியக்கடை காவல்துறையினர் இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், கொலையானது உழவர்கரை பகுதியைச் சேர்ந்த ரிசி, திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த தேவா, காயமடைந்தவர் ஜேஜே நகர் ஆதி என்பது தெரியவந்தது.
முன்விரோதமா?
இதில் ரிஷி பிரபல மறைந்த ரௌடியான தௌஸ்கானின் மகன் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் மருத்துமனையில் ஆதியும் பலியானார். முதற்கட்ட விசாரணையில், இவர்கள் ரியல் எஸ்டேட் உட்பட பல விவகாரங்களில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மேற்படி விசாரணை தொடருகிறது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை., மிஞ்சும் பாண்டிச்சேரி கொடூரம்.. கல்லூரி வளாகத்தில் மாணவி 3 பேர் கும்பலால் பலாத்கார முயற்சி.!