ஆன்லைன் லோன் மோசடி; ஆபாசமாக சித்தரித்து ரூ.300 கோடி பணம் பறிப்பு.!



in Pondicherry Man Scammed by Online Loan Scam Gang 

 

புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு பகுதியில் வசித்து வரும் ஆண்ட்ரூஸ் (வயது 40), செல்போன் விளம்பரத்தில் வந்த உடனடி லோன் விளம்பரத்தை பார்த்து, கடந்த 2023ம் ஆண்டு ரூ.10 ஆயிரம் கடன் பெற்று இருக்கிறார். இந்த கடன் தொகைக்கான வட்டியுடன் அசல் செலுத்தியபின், கூடுதல் வட்டி கேட்டு மிரட்டப்பட்டுள்ளது. 

ரூ.3 இலட்சம் இழப்பு

இதற்கு உடன்பட மறுப்பு தெரிவித்த ஆண்ட்ரூஸின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அதனை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் பயந்துபோன ஆண்ட்ரூஸ், பல தவணையாக ரூ.2.99 இலட்சம் பணம் கொடுத்துள்ளார். பின் ஒருகட்டத்திற்கு மேல் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: அண்ணா பல்கலை., மிஞ்சும் பாண்டிச்சேரி கொடூரம்.. கல்லூரி வளாகத்தில் மாணவி 3 பேர் கும்பலால் பலாத்கார முயற்சி.!

Pondicherry

ரூ.300 கோடி மோசடி

புகாரின் பேரில் நடந்த விசாரணையில் இதே கும்பல் கொள்ளையடித்த பணத்தை 14 நபர்களுக்கு பகிர்ந்து தெரியவந்தது. மேலும், மொத்தமாக ரூ.300 கோடி அளவில் மோசடி நடந்துள்ளது. முதற்கட்டமாக கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முகமது ஷபி (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டார். 

இதையும் படிங்க: ஆன்லைன் டிரேடிங்கில் பணம் இழப்பு; 29 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.!