#Justin: பொங்கல் பரிசாக குடும்ப அட்டைகளுக்கு ரூ.750/- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.!



  in Puducherry Govt Announce Rs 750 for Each Ration Card Pongal Festival Gift 

உலகத்தமிழர்கள் பெருந்திரளாக சிறப்பிக்கும் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாட, இன்னும் 12 நாட்களே எஞ்சி இருக்கின்றன. பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் வர சென்னை உட்பட வெளி மாவட்டத்தில் இருந்து பணியாற்றுவோரும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து பணியற்றுவோரும் திட்டமிட்டுள்ளனர். 

பொங்கல் பரிசுத் தொகுப்பு

தமிழகத்தை பொறுத்தமட்டில் அரசின் சார்பில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு கரும்பு, பச்சரிசி, வெல்லம் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதற்காக டோக்கன் கொடுக்கும் பணிகள் நடைபெறுகிறது. பரிசுத்தொகுப்புடன் மக்களுக்கு ரூ.1000 பணம் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: "என் மனைவி அதிகம் பேசுறா., விவாகரத்து கொடுங்க" - நீதிமன்றத்தில் கணவர் கோரிக்கை.!

புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

இந்நிலையில், புதுச்சேரியில் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.750 பொங்கல் பரிசு வழங்கப்படும். நேரடியாக இந்த தொகை வங்கிகளில் வரவு வைக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் நேரலையில் பெண் தற்கொலை; பதறியடித்து வீட்டுக்கு செல்வதற்குள் பிரிந்த உயிர்.!