திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: பள்ளி சீருடையில் அக்கா, தம்பி சரமாரியாக வெட்டிக்கொலை.. சேலத்தில் படுபயங்கரம்..!
வீட்டிற்கு வரத் தயாரான சிறுமி, சிறுவன் நிலத்தகராறில் கொலை செய்யப்பட்டுள்ள படுபயங்கரம் நடந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பனைமரத்துப்பட்டி, தும்மல்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜ். இவர் விவசாயியாக இருக்கிறர். இவருக்கு 17 வயதுடைய ப்ரவீனா என்ற மகள், 15 வயதுடைய சுகன் என்ற மகன் இருக்கின்றனர்.
நேற்று இவர்கள் இருவரும் கொல்லப்பநாயக்கனூர் அரசுப்பள்ளியில் படிக்கின்றனர். இருவரும் நேற்று பள்ளிக்குச் சென்றுவிட்டு, பின் மீண்டும் வீட்டிற்கு வரும்போது, அவர்களை வழிமறித்த தனசேகர், ஒருவன்காடு பகுதியில் இருவரையும் வெட்டிக்கொலை செய்துள்ளார் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கொடூரத்தின் உச்சம்... பலாத்காரம் செய்யப்பட்ட 8 வயது சிறுமி.!! ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை.!!
நிலத்தகராறில் கொடூர கொலை?
இவர்களுடன் வந்த ராஜுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பனைமரத்துப்பட்டி காவல்துறையினர், பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இருவரின் நிலங்களும் அடுத்தடுத்து உள்ள நிலையில், நிலத்தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என தெரியவருகிறது.
தலைமறைவான தனசேகரை காவல் துறையினர் தேடி வரும் நிலையில், இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு சூழல் உண்டாகியுள்ளது. இதனால் பதற்றத்தை தவிர்க்க காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.!! தெலுங்கு தேச கட்சி பிரமுகர் வெறி செயல்.!!