16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.!! தெலுங்கு தேச கட்சி பிரமுகர் வெறி செயல்.!!



16-year-old-girl-sexually-molested-by-telugu-desam-part

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பிரமுகரால் 16 வயது மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கு தேசம் கட்சியின் பிரமுகர்

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள பிதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் துர்கதா ஜான். ஆட்டோ டிரைவரான இவர் தெலுங்கு தேசம் கட்சியின் பிரமுகராகவும் இருந்து வருகிறார். இவரது மனைவி துர்கதா விஜயலட்சுமி தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் கவுன்சிலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்தக் கட்சியின் நகர தலைவராகவும் தற்போது செயல்பட்டு வருகிறார்.

India

ஆட்டோவில் கடத்திச் சென்று கற்பழிக்கப்பட்ட சிறுமி

ஆட்டோ டிரைவரான துர்கதா ஜான் கடந்த திங்கள்கிழமையன்று அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை தனது ஆட்டோவில் கடத்திச் சென்று இருக்கிறார். மேலும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சிறுமியை தூக்கிச் சென்ற அந்த நபர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பலாத்காரம் செய்ததை வெளியே கூறினால் சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்.

இதையும் படிங்க: " என்கிட்டயே டைவர்ஸ் கேப்பியா.." விவாகரத்து கேட்ட மனைவியை பலாத்காரம் செய்த கணவன்.!!

காவல்துறை விசாரணை

இந்நிலையில் வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக காக்கிநாடா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். அரசியல் பிரமுகரால் சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: கட்டுக்கட்டா என் பொண்டாட்டி லஞ்சம் வாங்குறா: நேர்மையின் சிகரமாக பாசமிகு கணவர்.! ஆதாரத்துடன் போட்டுக்கொடுத்த சம்பவம்.!