மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிளாஸ்டிக், பெனாயால் ஊற்றி போலியாக இஞ்சி-பூண்டு பேஸ்ட் தயாரித்து விநியோகம்; மக்களே உஷார்..!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கன்னம் மாவட்டம், ரிஜா பஜார் பகுதியில் உணவு தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சம்பவத்தன்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு இஞ்சி - பூண்டு பேஸ்ட் தயாரிப்பது தெரியவந்த நிலையில், அவர்கள் பிளாஸ்டிக், பெனாயால் உட்பட பல்வேறு வேதிப்பொருட்களை கலந்து அதனை தயாரித்து விநியோகம் செய்து வந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: #BigNews: தொண்டையில் முட்டை சிக்கி முதியவர் நொடியில் பலி; பசி மயக்கம் அவசரம்., விதியை முடித்த சோகம்.!
போலி சான்றிதலுடன் அதிர்ச்சி
மொத்தமாக சுமார் 960 கிலோ அளவிலான போலி இஞ்சி-பூண்டு பேஸ்ட் கைப்பற்றப்பட்டுள்ளது. உணவுப்பாதுகாப்புத்துறையின் உத்தரவு இல்லாமல், போலியான சான்றிதழை பெற்று நிறுவனம் செயல்பட்டு வந்ததும் அம்பலமானது.
இந்த விஷயம் தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடைகளில் வாங்கும் மசாலா, இஞ்சி-பூண்டு பேஸ்ட் விவகாரத்தில் மக்கள் கவனமுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
இதையும் படிங்க: நாயை துரத்திவந்து சோகம்; ஜன்னல் துவாரத்தில் பாய்ந்து இளைஞர் பரிதாப பலி.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!