தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
படிக்கட்டு பயணத்தால் ஊசலாடும் உயிர்; 16 வயது பள்ளி மாணவர் படுகாயம்.. பதறவைக்கும் காட்சிகள்.!
16 வயது பள்ளி மாணவர், பேருந்தில் இருந்து தவறி விழுந்தார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டம், பபணப்பெட், நரசிங்கி ஸ்கொயர் பகுதியில் அம்மாநில ஆர்டிசி பேருந்து பயணம் செய்தது. இந்த பேருந்தில் கூட்டமாக இருந்ததால், பலரும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
இதையும் படிங்க: காய்கறி வியாபாரிகள் மீது தறிகெட்டு பாய்ந்த லாரி; 10 பேர் பரிதாப பலி., 20 பேர் படுகாயம்.!
குறிப்பாக பள்ளி-கல்லூரிகளில் படித்து வரும் மாணாக்கர்கள், படியில் தொங்கியபடி ஆபத்தான பயம் மேற்கொண்டனர். பேருந்து பயணிகளை நிறுத்தத்தில் இறக்கிவிட்டு, பின் மீண்டும் புறப்பட்டது. லேசான வேகத்தில் தொடர்ந்து பேருந்து நகர்ந்தது.
படிக்கட்டு பயணத்தால் சோகம்
அப்போது, படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 16 வயதுடைய மாணவர் போடா அகிலா என்பவர், கை இடரி தவறி விழுந்தார். அவருடன் வேறொரு மாணவரும் சிறிது தூரத்தில் விழுந்தார். இதனால் அவர் லேசான காயம் அடைந்தார்.
ஆனால், அகிலா மட்டும் பேருந்தின் சக்கரத்தில் நேரடியாக விழுந்ததில், அவரின் மீது சக்கரம் ஏறி இறங்கியது. இந்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
సీసీటీవీ ఫుటేజ్.. ఆర్టీసీ బస్సు కింద పడి విద్యార్థినికి తీవ్రగాయాలు
— Telugu Scribe (@TeluguScribe) December 3, 2024
మెదక్ జిల్లా పాపన్నపేట మండలం నార్సింగి చౌరస్తాలో ఆర్టీసీ బస్సులో ఎక్కువ మంది ఎక్కడంతో ఫుట్బోర్డుపై నుండి బస్సు కిందపడ్డ విద్యార్థిని బోడ అఖిల(16).
కాళ్ళ పైనుండి బస్సు వెళ్లడంతో విద్యార్థినికి తీవ్రగాయాలు.. మరో… pic.twitter.com/sP26SmUOzo
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்ததால் கொடூரம்; பெண் காவலர் ஆணவக்கொலை.. கழுத்தறுத்து வெறிச்செயல்.!