தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
காய்கறி வியாபாரிகள் மீது தறிகெட்டு பாய்ந்த லாரி; 10 பேர் பரிதாப பலி., 20 பேர் படுகாயம்.!
சாலையோரம் இருந்த காய்கறி வியாபாரிகள் மீது லாரி மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள செவ்வெள்ள மண்டல் பகுதியில், காய்கறி வியாபாரிகள் கூட்டமாக நின்றுகொண்டு இருந்தனர். அச்சமயம் அங்கு வந்த லாரி ஒன்று, வியாபாரிகள் மீது மோதி விபத்திற்குள்ளானது.
10 பேர் பலி
இந்த விபத்தில் காய்கறி வியாபாரிகள் 10 பேர் பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயம் அடைந்து அலறித் துடித்தனர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
இதையும் படிங்க: சாலையோர மரத்தில் மோதி துயரம்; 3 பேர் பரிதாப பலி.. அப்பளமாக நொறுங்கிய கார்.!
காவல்துறையினர் விசாரணை
மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இவ்விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், எஞ்சியோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து; 11 பேரின் உயிரை பறித்த சோகம்..!