குளிர்பானத்தில் விஷம் கலந்து ஆன்லைன் காதலன் கொலை முயற்சி; நேரில் வந்து ஷாக் கொடுத்த பெண்.!



  in Uttar Pradesh 21 Aged Youth Murder Attempt by Girl Friend 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியைச் சேர்ந்தச் சேர்ந்தவர் தீர் ராஜ் (21). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் பயின்று வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக ராஜுக்கு பிரியா என்ற பெண்ணுடன் சமூக வலைத்தளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே காதலாக மாற, இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த டிச.26ம் தேதி காதல் ஜோடி சந்தித்துக்கொண்ட நிலையில் காரில் ராஜ், பிரியா இருந்துள்ளனர். அப்போது, இருவருக்கும் திருமணம் செய்வது தொடர்பாக விவாதம் எழுந்துள்ளது.

குளிர்பானத்தில் மயக்க மருந்து

இதனிடையே, பெண்மணி காதலனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து குடிக்க கொடுத்த நிலையில், தனது தோழிகளுக்கு தொடர்பு கொண்டு அவர்களின் உதவியுடன் காதலனை கொலை செய்ய முற்பட்டுள்ளார். நல்வாய்ப்பாக தாக்குதல் சம்பவத்தில் உயிர்பிழைத்த ராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: புத்தாண்டில் கொடூரம்.. தாய், 4 சகோதரிகள் கொடூர கொலை.. மகன் பரபரப்பு செயல்.!

இந்த விஷயம் தொடர்பாக அவரின் தந்தை ஹான்ஸ் ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் பிரியாவுக்கு வலைவீசி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: Watch: விடுமுறையில் சொந்த ஊருக்கு புறப்பட்டு, சடலமான காவலர்; இரயிலில் ஏறும்போது செல்போனில் பேசி விபரீதம்.!