புத்தாண்டில் கொடூரம்.. தாய், 4 சகோதரிகள் கொடூர கொலை.. மகன் பரபரப்பு செயல்.!



in Uttar Pradesh Lucknow Son Killed Mother and 4 Sisters 

குடும்ப சண்டையில் புத்தாண்டு இரவில் 24 வயது இளைஞர் குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ரா மாவட்டம், குபேரபூர் பகுதியில் வசித்து வருபவர் ஆஸ்மா. இவரின் குழந்தைகள் அர்சத் (24), ஆலியா (9), அல்சியா (19), அக்சா (16), ரெஹ்மீன் (18). சம்பவத்தன்று இவர்கள் அனைவரும் லக்னோவில் உள்ள நாக் பகுதிக்கு சென்று, அங்கிருந்த சிறிய ரக ஹோட்டலில் அறையெடுத்து தங்கினார்.

பிளேடால் அறுத்து கொலை

நேற்று இரவு நேரத்தில் குடும்பத்தினர் இடையே வாக்குவாதம் உண்டாகியதாக தெரியவருகிறது. அப்போது, ஆத்திரமடைந்த அர்சத், தனது தாய் ஆஸ்மா மற்றும் 4 உடன்பிறந்த சகோதரிகளை பிளேடால் சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஐவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதையும் படிங்க: திருமணம் முடிந்த 4 வது நாளில் கணவனுக்கு பால் ஊற்றிய மனைவி; கல்யாண பரிசாக சிறைவாசம்.!

காவல்துறை விசாரணை

இந்த விஷயம் தொடர்பாக விடுதி ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஐவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அர்சத்தை கைது செய்தனர்.  

அவரிடம் நடந்த விசாரணையில் முதற்கட்டமாக குடும்ப பிரச்சனையால் குடும்பத்தினரை கொலை செய்ததாக தெரிவித்து இருக்கிறார். மேற்படி விசாரணை நடந்து வருகிறது. புத்தாண்டு அன்று நடந்த இந்த துயரம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "அப்பாவை அம்மா செங்கலால அடிச்சிச்சு" - 5 வயது சிறுவனின் அதிர்ச்சி வாக்குமூலம்.. வசமாக சிக்கிய தாய்.!