#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சூதாட்டத்தை கண்டித்த iகாவலர்கள் மீது கொடூர தாக்குதல்; சிறப்பாக கவனித்து அனுப்பிய அதிகாரிகள்..! ஐயோ., அம்மா கதறல்.!
இரண்டு காவலர்கள் தானே என கையில் கிடைத்தவர்களை தாக்கிய கும்பலுக்கு இறுதியில் தீபாவளி பரிசு கொடுத்து காவல்துறை அனுப்பி வைத்த சம்பவம் உ.பியில் நடந்துள்ளது.
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி மாவட்டம், பிரேம் நகர் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்குள்ள பகுதியை சேர்ந்தோர், கூட்டமாக அமர்ந்து சூதாட்ட பந்தயம் விளையாடி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: தீ விபத்தில் சிக்கி பிஸ்கட் நிறுவனத்தின் உரிமையாளர், மனைவி, பணிப்பெண் என 3 பேர் பலி; கண்ணீர் சோகம்.!
காவலர்கள் அறிவுரை
இதனைக்கண்ட காவல்துறையினரான ஆய்வாளர் சுபம் சௌதாரி, காவலர் மனிஷ் கும்பலை கண்டித்து வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கின்றனர். அதனை கேட்காத கும்பல், 2 காவலர்கள் தானே வந்துள்ளார்கள் என அவர்களை விரட்டிவிரட்டி தாக்கி இருக்கிறது.
காவலர்கள் தாக்கப்பட்ட காணொளி
पुलिस के इक़बाल को ललकारा... जुआ खेलने से रोका तो पुलिस वालो को बेरहमी से पीटा... वर्दी फाड़ी, दरोगा समेत दो घायल
— TRUE STORY (@TrueStoryUP) November 1, 2024
UP के बरेली में प्रेमनगर थाना क्षेत्र में गश्त के दौरान जुआ खेल रहे कुछ लोगों ने पुलिस टीम पर हमला कर दिया। हमले में दारोगा शुभम चौधरी और सिपाही मनीष को गंभीर… pic.twitter.com/eYcZUk3UFc
காவலர்கள் காயம்
இந்த சம்பவத்தில் காவலர்கள் இருவரும் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். சுமார் 25 பேர் சேர்ந்து தாக்குதல் நடத்தியதாக தெரியவருகிறது. தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளியும் வெளியாகியுள்ளது.
இதனிடையே, காவலர்கள் தாக்கப்பட்டு செய்தி அறிந்து கூடுதல் காவல் துறையினர் களமிறக்கப்ட்ட நிலையில், அதிகாரிகள் 25 பேருக்கு எதிராக வழக்குப்பதிந்து இவர்களில் 9 பேரை கைது செய்தனர்.
பதில் ட்ரீட்மெண்ட்
கைதான 9 பேரும் தீரஜ், விஜய், கபில், விபின், நன்ஹே, ராஜு, சோட் லால், வினோத், குணால், ஆதேஷ், ரமேஷ், அர்ஜுன், ராகுல், வருண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். எஞ்சியோருக்கு வலைவீசப்பட்டுள்ளது. கைதான நபர்கள் காவல் துறையினரால் சிறப்பாக கவனிக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
காவல்துறை கவனிப்புக்கு பின்
बरेली, UP में दिवाली की रात जुआ खेलने की सूचना पर पहुंची पुलिस पर हमला।
— Sachin Gupta (@SachinGuptaUP) November 1, 2024
14 आरोपी धीरज, विजय, कपिल, विपिन, नन्हें, राजू, छोटेलाल, विनोद, कुनाल, आदेश, रमेश, अर्जुन, राहुल, वरुण पर FIR हुई, 9 आरोपी गिरफ्तार हैं। pic.twitter.com/e2Ub0cGsVd
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.!! கையும் களவுமாக சிக்கிய டிடிஆர்.!!