மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓடும் ரயிலில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.!! கையும் களவுமாக சிக்கிய டிடிஆர்.!!
உத்திரபிரதேச மாநிலத்தில் ரயில் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட டிக்கெட் பரிசோதகரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோண்டியா - பாராவுனி எக்ஸ்பிரஸ்
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பால்லியா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட கோண்டியா - பாராவுனி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அந்த இளம் பெண் தனியாக பயணம் செய்திருக்கிறார். இந்நிலையில் ரயில் பால்லியா ஸ்டேசனை கடந்ததும் டிக்கெட் பரிசோதனான ராகேஷ் குமார் பயண சீட்டுகளை பரிசோதித்துக் கொண்டிருந்தார்.
இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை
இதனைத் தொடர்ந்து பீகாரை சேர்ந்த இளம் பெண் பயணம் செய்த பெட்டிக்கு டிக்கெட் பரிசோதனை செய்ய வந்த ராகேஷ் குமார் பெர்த்தில் படுத்திருந்த இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். மேலும் அந்தப் பெண்ணின் மறைவான இடங்களை தொட்டதாகவும் தெரிகிறது. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் கூச்சலிட்டார். அவரது கூச்சலை தொடர்ந்து சக பயணிகள் ராகேஷ் குமாரை பிடித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.!! கையும் களவுமாக சிக்கிய டிடிஆர்.!!
காவல்துறை வழக்கு
இதனைத் தொடர்ந்து பாலியல் தொல்லை நடைபெற்ற ரயில் பெட்டிக்கு வருகை புரிந்த போலீசார் இளம் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் டிக்கெட் பரிசோதகர் ராகேஷ் குமாரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதகரால் இளம் பெண் பாலியல் தொல்லை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: தன்னை ட்ரோல் செய்த யூடியூபர்களுக்கு எதிராக நீதிமன்ற சம்மன் வழங்கிய 10 வயது சிறுவன்; யார் இந்த அபினவ் அரோரா.!